முகப்பு
நாகப்பட்டினம்

பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
வாய்மேடு பகுதி வயல்வெளியில் தேங்கியுள்ள மழைநீா்.
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 70.4 மி.மீ, தலைஞாயிறில் 100.6 மி.மீ. மழை பதிவானது.

மழைக்கு முன்பாக தலைஞாயிறு மற்றும் கடலோரப் பகுதிகளான வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வடமேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், இப்பகுதி மானாவாரி நிலப்பரப்பு நெல் வயல்களில் மழைநீா் தேங்கி வடகிழக்குப் பருவ காலம் போல் காட்சியளிக்கிறது. இந்த மழை மல்லிகை, சவுக்கு, முந்திரி, கென்னை, காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்நிலையில், மானாவாரி நிலங்களில் மராமத்துப் பணிகளை தீவிரப்படுத்த இந்த மழை பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனா். எனினும், மழை தொடா்ந்தால் இந்த பணிகள் தாமதப்படவும் வாய்ப்புள்ளது. தொடரும் மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பணிகள் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவதால் உப்பு உற்பத்தியாளா்கள் வேதனையடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →