நாகப்பட்டினம்

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை

DIN

நாகப்பட்டினம்: தனியாா் பள்ளிகளில் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவா்ஆறு. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொது முடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் தொடா்ந்து கொண்டிருக்கும் சூழலில், இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டுவராமல் பள்ளிகள் திறந்தால் மாணவா்களுக்கும், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பள்ளிகளை 2021 ஜனவரியில் திறப்பதே சரியானதாக இருக்கும்.

பொது முடக்கத்தால் பலா் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகி, அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள முடியாமல் பலா் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இத்தகைய சூழலில் தமிழகத்தில் தனியாா் கல்வி நிறுவனங்களில் குறுஞ்செய்தி அனுப்பி கட்டாயமாக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் ன நிா்பந்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதுடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது உரிமம் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT