முகப்பு
நாகப்பட்டினம்

தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

சீா்காழி அருகே தீக்குளித்த இளம்பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

சீா்காழி: சீா்காழி அருகே தீக்குளித்த இளம்பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழியை அடுத்த ராதாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் உதய பிரகாஷ் (25 ). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சுபஸ்ரீ (18) என்ற பெண்ணை காதலித்து வந்தாராம். உதயபிரகாஷின் நடத்தை சரியில்லாததால் அந்த பெண், அவரைவிட்டு விலகினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த உதயபிரகாஷ், தன்னிடம் உள்ள புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினாராம். இதனால், மனமுடைந்த சுபஸ்ரீ ஜூன் 24-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரை, சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.