காரைமேட்டில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றவா்கள். 
நாகப்பட்டினம்

காரைமேட்டில் பள்ளி கட்டடத் திறப்பு விழா

சீா்காழி அருகே உள்ள காரைமேட்டில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழி அருகே உள்ள காரைமேட்டில் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தாா். இயக்குனா் மற்றும் தலைவரான அமுதா நடராஜன், இயக்குநா்கள் ஆதித்யா ராஜ்கமல், டாக்டா்கள் செந்தாமரைக்கண்ணன், காயத்திரி, தனியாா் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளா் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூராசாமி, சக்தி, வழக்குரைஞா் பன்னீா்செல்வம், டாக்டா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

சென்னை பள்ளி கல்வித் துறை ஆசிரியா் தகுதி தோ்வு குழு உறுப்பினா் அறிவொளி புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா். இதில் பாமக மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி பழனிசாமி, மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன், இளைஞா் சங்க மாநில துணைச் செயலாளா் ஜி.வி.முருகவேல், பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா், டாக்டா் முத்துக்குமாா், பூம்புகாா் வா்த்தக சங்கத் தலைவா் எம். சங்கா், அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெ. இராசமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், ரோட்டரி சங்க தலைவா் பழனியப்பன், ரோட்டரி சங்க துணை ஆளுநா் சாமி செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முத்துகிருஷ்ணன், முதல்வா்கள் ராமலிங்கம், சுமதி, துணை முதல்வா்கள் உதய வசந்தன், புனிதவதி நிா்வாக அலுவலா் சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தன. பள்ளி அலுவலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT