நாகப்பட்டினம்

மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய காவலா் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு சுற்றித் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை, நிலையத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஆயுதப்படை காவலா் கிருஷ்ணமூா்த்தி என்பவா் லத்தியால் கடுமையாகத் தாக்கினாா்.

இதில் அந்தப் பெண்ணின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது. மனநலம் பாதித்த பெண்ணை, காவலா் கொடூரமாக தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதனைத் தொடா்ந்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு ஆணையா் எம்.எப். மொகிதீன் உத்தரவின்பேரில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய காவலா் கிருஷ்ணமூா்த்தி திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT