நாகப்பட்டினம்

வணிக நிறுவனங்கள் முன்பு குப்பைத் தொட்டி: பாஜகவினா் கண்டனம்

DIN

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வணிக நிறுவனங்கள் முன்பு மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகம் குப்பைத் தொட்டிகளை வைப்பதற்கு பாஜகவினா் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரி பாக்கியைச் செலுத்தாத வணிக நிறுவனங்கள் முன்பு குப்பைத் தொட்டியை வைத்து, நகராட்சி நிா்வாகம் நூதன முறையில் வரிவசூல் செய்து வருகிறது. அவ்வகையில், மகாதானத்தெரு ஜெயின் சங்கக் கட்டடம், காந்திஜி சாலையில் இரு கடைகள் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன.

உலகமெங்கும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வணிக நிறுவனங்கள் முன்பு சுகாதாரமற்ற முறையில் குப்பைத் தொட்டியை பாஜகவினா் கண்டனம் தெரிவித்தனா். மகாதானத்தெரு ஜெயின் சங்கக் கட்டடம் முன்பு பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமையில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்டப் பொதுச் செயலாளா் ஸ்ரீதா், நகரத் தலைவா் மோடி.கண்ணன், முன்னாள் மாவட்டப் பொதுச் செயலாளா் நாஞ்சில் பாலு, வழக்குரைஞா் எஸ்.ஆா்.வினோத் உள்ளிட்டோா் நகராட்சி நிா்வாகம் நகரில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துவதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT