நாகப்பட்டினம்

தாத்தா, பாட்டியைப் பார்க்கும் ஆர்வத்தில் 50 கி.மீ., வழிதவறி இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன்

DIN

தாத்தா, பாட்டியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் தந்தைக்கு தெரியாமல் அவரது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்ற 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வழிதெரியாமல் 50கிமீ தூரம் கடந்து சீர்காழிக்கு வந்துவிட்டான். அவனை மீட்டு நோட்டு, பேனா ஆகியவற்றையும் வழங்கி அவனது பெற்றோர்களிடம் சீர்காழி காவல்துறையினர் சனிக்கிழமை ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி(43). இவரது மகன் வெற்றிசெல்வன்(11). அதேபகுதி பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவனது அம்மா வழி தாத்தா-பாட்டி வீடு சேத்தியாதோப்பு அருகே ஒரு கிராமம் ஆகும். கரோனா தீ நுன்மி பொதுமுடக்கத்தால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு கடந்த 45 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே இருக்கும் வெற்றிசெல்வன், தனது தாத்தா-பாட்டியை காணவேண்டும் என தந்தையிடம் கூறி வந்ததாக தெரிகிறது. 

இதனிடையே பேருந்து போக்குவரத்து ஏதும் இல்லாததால் பிறகுபார்த்துக்கொள்ளலாம் என தந்தை கூறிவிட்டார். இந்நிலையில் சனிக்கிழமை காலை வெற்றிசெல்வன் தனது தந்தையின் டிவிஎஸ் எக்ஸ் எல் மோட்டார் சைக்கிளை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு தாத்தா வீடான சேத்தியாதோப்புக்கு புறப்பட்டு சென்றாராம். வழிதெரியாமல் சிதம்பரத்தை கடந்து சீர்காழி வரை சிறுவன் வந்துள்ளான். 

எருக்கூரை கடந்து போது அவனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் சிறுவன் வெற்றிசெல்வன் வண்டியை தள்ளிக்கொண்டே அழுதுக்கொண்டு பசி மயக்கத்தில் தள்ளிசென்றுள்ளான். அப்போது நெடுஞ்சாலையில் ரோந்து சென்ற சீர்காழி காவல்ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனை பார்த்து அவனிடம் விசாரித்தபோது நடவற்றை கூறியுள்ளான். பின்னர் அந்த சிறுவனை சீர்காழி காவல்நிலையம் அழைத்து சென்று அவனது பெற்றோர் முகவரியை வாங்கி அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். 

அவனது தந்தை சாந்தமூர்த்தி மற்றும் தாத்தா உறவினர் சிலர் காவல்நிலையம் வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் இதுபோன்று அலட்சியமாக சிறுவனிடம் மோட்டார் சைக்கிளை தந்ததற்கு கண்டித்து பின்னர் உளவியல் ரீதியாகவும், சோர்ந்து இருந்த சிறுவனுக்கு குளிர்பானம், பிஸ்கெட், பழங்களை வாங்கிதந்த காவல்துறையினர் அவனுக்கு அறிவுறை வழங்கி நோட்டு, பேனா, பென்சில் ஆகியவற்றையும் வழங்கி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT