மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்னை மாணவர் முதலிடம்
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் மீன்வள அறிவியல், பி.டெக், வணிக மேலாண்மை, இளநிலை தொழில்நுட்பவியல் ஆகிய 4 இளநிலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் உள்ள 386 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் மீன்வள பல்கலைக்கழக இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் www.tnjfu.ac.in இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இதில், சென்னையைச் சேர்ந்த மாணவர் ப.ஆதித்யா நாகராஜன் 195.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாணவர் பா.ரிஷி கேசவன் இரண்டாமிடத்தையும், தேனியைச் சேர்ந்த மாணவர் சி.கோபிகிருஷ்ணா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.