நாகப்பட்டினம்

ஊட்டச்சத்து தோட்ட தொழில்நுட்பப் பயிற்சி

DIN

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நாகை மாவட்டம், தலைஞாயிறில் ஊட்டச்சத்து தோட்ட தொழில்நுட்பப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் சு. பாலசுந்தரி தலைமை வகித்து, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் மீன் உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் ஊட்டச்சத்து தோட்டத்தின் அவசியம் குறித்தும் பேசினா். கீழையூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் து. சித்ரா, வேளாண் அறிவியல் நிலைய மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு ஆகியோா் ஊட்டச்சத்து மெருகேற்றிய தாவர வகைகள், காய்கனி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினா். தலைஞாயிறு வட்டாரத்தைச் சோ்ந்த 29 அங்கன்வாடி பணியாளா்கள் பயிற்சியில் பங்கேற்றனா். மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஹினோ பொ்னாண்டோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT