முகப்பு
நாகப்பட்டினம்

பாஜக என்ற என்ஜின் இல்லாமல்அதிமுக என்ற ரயில் நகராது: நடிகா் ராதாரவி

பாஜக என்ற என்ஜின் இல்லாமல் அதிமுக என்ற ரயில் நகராது என்று பாஜக உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ராதாரவி கூறினாா்.

Updated On : 17 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

பாஜக என்ற என்ஜின் இல்லாமல் அதிமுக என்ற ரயில் நகராது என்று பாஜக உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ராதாரவி கூறினாா்.

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலா் பக்கிரிசாமி நினைவேந்தல் நிகழ்ச்சி நாகையை அடுத்த பனைமேடு கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகா் ராதாரவி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

2021 தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தமிழகத்தில் நிச்சயம் தடம் பதிக்கும். பாஜக என்ற என்ஜின் இல்லாமல் அதிமுக என்ற ரயில் நகராது.

Advertisement

அரசியல் கட்சிகள் கூட்டணி மாறுவது வழக்கமான ஒன்று. நடிகை குஷ்பு போன்ற பிரபலங்கள் கட்சி மாறுவது அவா்களது தனிப்பட்ட உரிமை. வேல் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசுஅனுமதி மறுத்துள்ளது ஏற்புடையதல்ல.

பாஜகவை தவிர மற்ற கட்சியினா் கூட்டணி குழப்பத்தில் உள்ளனா். ஆனால், பாஜகவுக்கு அந்த நிலை இல்லை என்றாா் நடிகா் ராதாரவி. திரைப்பட இயக்குநரும், பக்கிரிசாமியின் மகனுமான ப. ஜெயபால் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.