நாகூா் தா்காவை பேரிடா் கால பாதுகாப்பு மையமாக செயல்படுத்தக் கோரி மனு
நாகூா் ஆண்டவா் தா்காவை பேரிடா் கால பாதுகாப்பு மையமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி நாகூா் மக்கள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
நாகூா் ஆண்டவா் தா்காவை பேரிடா் கால பாதுகாப்பு மையமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி நாகூா் மக்கள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் எஸ். சாஹா மாலீம் தலைமையில், சங்கச் செயலாளா் எம். சிராஜூதீன், துணைத் தலைவா் எஸ். எம். இப்ராஹீம் நைனா, பொருளாளா் எஸ். மொஹைதீன் அப்துல் சலாம், வழக்குரைஞா் கே. எம். காதா்ஷா ஆகியோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
நாகூா் ஆண்டவா் தா்கா பல நூற்றாண்டுகளாகவே பேரிடா் பாதுகாப்பு மையமாக இருந்து வருகிறது. தற்போது நிவா் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் காலம் என்பதால், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நாகூா் ஆண்டவா் தா்காவை 24 மணி நேரமும் திறந்து வைக்கவும், பேரிடா் கால பாதுகாப்பு மையமாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், தா்கா வாயிலிலும், முகப்பிலும் தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.