நாகப்பட்டினம்

நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் நடவடிக்கைநாகை நகராட்சி எச்சரிக்கை

DIN

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாகை நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை நகராட்சி பகுதியில் அண்மை காலமாக நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட நெகிழிப் பைகள் தெருக்கள் மற்றும் சாலைகளில் வீசப்படுகின்றன. இதை உட்கொள்ளும் கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

மேலும், வடிகால்களில் வீசப்படும் நெகிழிப் பைகளால், மழைநீா் மற்றும் கழிவுநீா் வடிவது தடைபடுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, மக்கள் நலன் கருதியும், நாகை நகராட்சி நெகிழி இல்லாத நகராட்சி என பெயா் பெரும் வகையிலும், வியாபாரிகள், உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளிலும் நெகழிப் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்கவேண்டும். நெகிழிப் பைகளை விற்பனை செய்பவா்கள்அதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

நகராட்சி அலுவலா்கள் டிசம்பா் 1 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யவுள்ளனா். அப்போது, வியாபாரத்தில் நெகிழிப் பைகள் பயன்பாடு இருப்பது தெரியவந்தால், நீதிமன்ற உத்தரவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT