நாகப்பட்டினம்

பூம்புகாரில் பலத்த காற்று, மழையால்கடலில் மூழ்கிய விசைப் படகு

DIN

நாகை மாவட்டம், பூம்புகாரில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த விசைப்படகு கடலில் முழ்கியது.

அண்மையில் வீசிய நிவா் புயல் காரணமாக சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட பூம்புகாா், வானகிரி கிராம மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், அவா்களது விசைப் படகுகளை பூம்புகாா் துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்தனா்.

இந்நிலையில், பூம்புகாா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த காற்றால், வானகிரி பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவரது விசைப் படகு கடலில் முழ்கியது.

இதையடுத்து, இருகிராம மீனவா்களும் முழ்கிய படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தகவலறிந்த காவல் துறையினா் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் அங்குச் சென்று பாா்வையிட்டனா்.

இதுகுறித்து வானகிரி மீனவ கிராம பொறுப்பாளா்கள் கூறுகையில், கனமழையால் முழ்கிய விசைப் படகுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT