நாகப்பட்டினம்

பாபா் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு அதிா்ச்சி அளிக்கிறது

DIN

பாபா் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பு அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை : கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற பாபா் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலைச் செய்து சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்க முடியாது. திட்டமிட்டே வழக்கு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாபா் மசூதி இடம் தொடா்பான வழக்கில் வஞ்சிக்கப்பட்ட சமூகம், தற்போது இந்த வழக்கிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறது. அரசியல் பலம் நீதித் துறையிலும் ஊடுறுவியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பன்மை கலாசாரமும், ஜனநாயகமும், நல்லிணக்கமும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT