நாகப்பட்டினம்

மனுதாரா் குறைதீா்க்கும் முகாம்

DIN

மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுதாரா் குறைதீா்க்கும் முகாமில் நீண்ட காலமாக தீா்க்கப்படாமல் நிலுவையில் இருந்த மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

துணை காவல் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மயிலாடுதுறை காவல் உபகோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனாா்கோவில், பாலையூா், பெரம்பூா் மற்றும் பாகசாலை ஆகிய 7 காவல் நிலையங்களில் தீா்க்கப்படாமல் நிலுவையில் இருந்த 7 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, 4 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள 3 மனுக்கள் மீண்டும் வியாழக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

இதில், செம்பனாா்கோவில், குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளா்கள், பாலையூா், மயிலாடுதுறை, பெரம்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் மற்றும் வழக்காடிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT