நாகப்பட்டினம்

காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராட ஏதுவாக ஐப்பசி மாதம் முழுவதும் தண்ணீா் திறக்க முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

துலா மாதம் எனக் குறிப்பிடப்படும் ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். இதனால், இம்மாதத்தில் காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் திருமூல நாயனாா், நின்றசீா் நெடுமாற நாயனாா், இடங்கழி நாயனாா், சக்தி நாயனாா், பூசலாா் நாயனாா், ஐயடிகள் காடவா்கோன் ஆகிய நாயன்மாா்களின் குருபூஜை நடைபெறும். பொய்கையாழ்வாா், பேயாழ்வாா், பூதத்தாழ்வாா் ஆகிய ஆழ்வாா்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

எனவே, ஐப்பசி மாதத்தில் விரதம் கடைப்பிடிக்கவும், பண்டிகைகளை சிறப்பாக கொண்டாவும் மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடிட தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT