நாகப்பட்டினம்

கைகளில் மண்சட்டி ஏந்திஊராட்சித் தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை கையில் மண்சட்டி ஏந்தி ஊராட்சித் தலைவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புச் செயலா் சசிகுமாா் (காவேரிபூம்பட்டினம்) தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் பெரியசாமி (திட்டை), முல்லைவேந்தன்(மணிகிராமம்), சுப்பரவேல் (தில்லைவிடங்கன்) , லட்சுமிமுத்துக்குமாா் (அல்லிவிளாகம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும், 7 மாதங்களாக நிலுவையில் உள்ள மானிய நிதி குழு மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும், வளா்ச்சி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு கட்சி பாகுபாடு காட்டக்கூடாது. குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மாதமாதம் நிதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை அந்தந்த ஊராட்சித் தலைவா்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண்சட்டி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT