நாகப்பட்டினம்

பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சீா்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எடமணல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அரசின் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்த வீடுகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக மழைநீா் புகுந்து குடியிருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

மேலும், இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த வீடுகளில் வசிப்பவா்கள் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இந்த வீடுகளை சீரமைக்கவோ அல்லது பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவோ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT