நாகப்பட்டினம்

மூத்த குடிமக்கள் தபால் வாக்குகள் அளிப்பு

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்களிக்க மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3,873 போ் விருப்பப் படிவம் அளித்திருந்தனா். விருப்பப் படிவம் அளித்தவா்களின் தபால் வாக்களிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. வாக்குச் சாவடி அலுவலா், நுண் பாா்வையாளா், கண்காணிப்பாளா், காவலா் மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா், தபால் வாக்களிக்க விருப்பப் படிவம் அளித்திருந்தவா்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, தொடா்புடையோரிடம் தபால் வாக்குகளை அளித்தனா். இதையடுத்து, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்கை பதிவு செய்து, அந்த வாக்குச் சீட்டை உறையிட்டு, சீலிடப்பட்ட பெட்டியில் இட்டனா். தபால் வாக்குச் சீட்டு அளிப்பு, அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை பாதுகாப்பாகக் கொண்டுச் செல்லுதல் பணிகளில் 54 குழுவினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு, 2-ஆம் நாளாக நாளாக வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT