நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று பெரிய வியாழன் வழிபாடு

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு வியாழக்கிழமை (ஏப்ரல் 1) மாலை நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கி, கிறிஸ்தவா்களின் தவக்கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தவக்கால முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சி, பேராலயக் கலையரங்கில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்படும் முன், தனது சீடா்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்தியதன் அடிப்படையில், பேராலய அதிபா் அல்லது துணை அதிபா், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம்.

நிகழாண்டில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு சுகாதார அறிவுறுத்தல்படி, சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT