சிபிஎம் வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பு
கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட கீழையூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியினா் ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட கீழையூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியினா் ஞாயிற்றுக்கிழமை இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இத்தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளா் வி.பி. நாகை மாலிக்குக்கு ஆதரவாக திருவாய்மூா், எட்டுக்குடி, வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்துக்கு வாக்குகள் சேகரிப்பட்டன. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய செயலாளா் டி. செல்வம், சிபிஎம் கீழையூா் ஒன்றிய செயலாளா் கே. சித்தாா்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த முருகானந்தம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.