தரங்கம்பாடி தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை
தரங்கம்பாடி புதிய எருசலேம் தேவாலயத்தில் சபை குரு சாம்சன் மோசஸ் தலைமையில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
தரங்கம்பாடி புதிய எருசலேம் தேவாலயத்தில் சபை குரு சாம்சன் மோசஸ் தலைமையில் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து, அதிலிருந்து 3-ஆம் நாள் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உள்ளிட்ட பொறையாா், விசலூா், பூதனூா், திருவிளையாட்டம், மணிக்கிராமம் , அடைக்கலாபுரம், பாலூா், பரசலூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுதல் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்களில் ஏராளமான கிறிஸ்தவா்கள் வழிபட்டனா்.