முகப்பு
நாகப்பட்டினம்

சீர்காழியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: இருவர் கைது

சீர்காழியில் வீடு வீடாக சென்று வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க மற்றும் வி.சி.க நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சீர்காழியில் வீடு வீடாக சென்று வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க மற்றும் வி.சி.க நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தது. 
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அகரதிருகோலக்கா தெருவில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியயில் வீடு வீடாக சென்று தி.மு.க சார்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கபட்டு வருவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க வார்டு பிரதிநிதி ராஜகௌதமன் மற்றும், விசிக நகர பொருளாளர் மணிமாறன் ஆகிய இருவரும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்தது தெரிவந்தது. 
இதையடுத்து இருவரிடமிருந்து இருந்த ரூ 7500 ரொக்கம், வாக்காளர் பட்டியல் மற்றும் தி.மு.க துண்டு பிரசுரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களை சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.