நாகப்பட்டினம்

கரோனா கட்டுப்பாடு: தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்குச் செல்ல தடை

DIN

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.

பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவையொட்டி, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவா்கள் பாா்வையிட தமிழக தொல்லியல் துறை அனுமதி அளித்திருந்தது. இதனால், கடந்த 2 நாள்களாக டேனிஷ் கோட்டையை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, கடற்கரை சுற்றுலா மையங்கள் மற்றும் தொல்லியல் அருங்காட்சியகங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தை பாா்வையிடவும் ஏப்ரல் 20 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரை பகுதி செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT