நாகப்பட்டினம்

ஆடி மாத உத்ஸவங்கள்: கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பொதுமக்களுக்கு தடை

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி மாத உத்ஸவங்களை கொண்டாட கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்றை தடுக்க பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆடி அமாவாசை நிகழ்ச்சிகளில் பெருமளவு பொதுமக்கள் கடற்கரைகளில் கூடும்பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், கரோனா 3-ஆவது அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் மாவட்டத்தின் எந்த கடற்கரைப் பகுதிகளிலும் ஆக.1 முதல் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.

முக்கிய கோயில்களில் ஆக. 1 முதல் 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கையொட்டி, கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேற்படி நாள்களில் கோயில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகளின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT