நாகப்பட்டினம்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

வேளாங்கண்ணியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் எம். பொன்னுசாமி பங்கேற்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வா்த்தகா்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். முகக் கவசம் அணியாமல் சாலையில் சுற்றிய 50 பேரிடம் தலா ரூ. 200 வீதம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT