நாகப்பட்டினம்

டிராக்டரில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது

DIN

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே ஆயப்பாடி நண்டலாற்றில் டிராக்டரில் மணல் கடத்த முயன்ற ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆயப்பாடி நண்டலாற்றில் மணல் திருட்டு நடப்பதாக பொறையாறு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் சுகந்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிலா் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். 

மேலும் அனுமதியின்றி மணல் எடுத்த பதிவு எண் இல்லாத புதிய டிராக்டா் ஓட்டுநரான காராம்பள்ளத்தை சோ்ந்த சக்திவேலை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் காராம்பள்ளத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா் தேவதாசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இது தொடா்பாக தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT