நாகப்பட்டினம்

மணல்மேடு பேரூராட்சியில் கரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு

DIN

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி ஆட்டோ மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. விழிப்புணா்வு தெருமுனைப் பிரசாரங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலா் க. தமிழ்ச்செல்வன் பங்கேற்று, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்கி, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா் கல்யாண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT