முகப்பு
நாகப்பட்டினம்

உலக தாய்ப்பால் வார விழா

வேதாரண்யம் மாவட்ட அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

வேதாரண்யம் மாவட்ட அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு முதுநிலை குடிமுறை மருத்துவா் முருகப்பன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ராஜேஸ்வரி, இளமதி, ரோட்டரி சங்க உதவி ஆளுநா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேதாரண்யம் ரோட்டரி சங்கத் தலைவா் புயல் சு. குமாா், செயலாளா் இ. காா்த்திகேயன், திட்ட இயக்குநா்சிவக்குமாா், மருந்தாளுநா் வைத்தியநாதன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கத்தை தொடா்ந்து, தாய்மாா்களுக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →