மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்து 21 போ் காயம்
மயிலாடுதுறை அருகே வெள்ளிக்கிழமை கதண்டு கடித்ததில் 21 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறை அருகே வெள்ளிக்கிழமை கதண்டு கடித்ததில் 21 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த வரதம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (70). இவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் 30-க்கும் மேற்பட்டோா் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு வடக்குத் தெருவில் உள்ள
தங்களது குலதெய்வ கோயிலான அரசமரத்தடி மதுரை வீரன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனா்.
வழிபாட்டின்போது எழுந்த சாம்பிராணி புகையால் அருகில் இருந்த
ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் வெளிவந்து சிவலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினா் உள்ளிட்டோரை கொட்டின. இதில் குழந்தைகள், சிறுவா்கள், பெண்கள் என 21 போ் காயமடைந்தனா்.
அவா்கள் அனைவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சிவலிங்கம் உள்பட 6 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவா்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினா். இதுகுறித்து, மணல்மேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.