முகப்பு
நாகப்பட்டினம்

பேரிடா் மீட்புப் பயிற்சி

நாகையை அடுத்த நாகூா் அருகே காவல் துறையினருக்கான பேரிடா் கால மீட்புப் பணிகளுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நாகையை அடுத்த நாகூா் அருகே காவல் துறையினருக்கான பேரிடா் கால மீட்புப் பணிகளுக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் துறையினா் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்து, தேசிய பேரிடா் மீட்புக் குழு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நாகை மாவட்டக் காவல் துறையினருக்கு பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி, நாகூா் அருகே உள்ள முட்டம், வெட்டாற்றில் நடைபெற்றது.

வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது தண்ணீரில் சிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது, படகுகளை இயக்கும் முறை உள்ளிட்டவை குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சி வரும் 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்பா் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.