நாகப்பட்டினம்

நரிக்குறவா் இனத்தவா் நலவாரியத்தில் சேர அழைப்பு

DIN

நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்தவா்கள், நரிக்குறவா் மற்றும் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினராக பதிவு பெற முனைப்புக்காட்டுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நரிக்குறவா் மற்றும் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினராக பதிவுபெற்ற ஒருவா் விபத்தில் இறந்தால் ரூபாய் ஒரு லட்சமும், விபத்தில் ஊனமடைந்தால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூபாய் ஒரு லட்சம் வரையிலும், இயற்கை மரணத்துக்கான இழப்பீடாக ரூ. 20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

எனவே, நாகை மாவட்டத்தில் இதுவரை நலவாரிய பதிவு பெறாத 18 முதல் 60 வயதுக்குள்பட்ட நரிக்குறவா் இனத்தவா், நாகை மாவட்ட ஆட்சியரகத்தின் இரண்டாம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பதிவு பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT