முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் இணைப்பில் முறைகேடு செய்தால் நடவடிக்கை

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்புகளில் மோட்டாா் பொருத்தி, முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்புகளில் மோட்டாா் பொருத்தி, முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

தலைஞாயிறு பேரூராட்சிப் பகுதியில் நிலத்தடி நீா் உவா்நீராக மாறி விட்டதால், இப்பகுதி மக்கள் வேதாரண்யம்- கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட நீராதாரத்தையே நம்பி உள்ளனா். சிலா் குடிநீா் இணைப்பில் சட்டவிரோதமாக மோட்டாா் பொருத்தி, உறிஞ்சி நீா் எடுப்பதால் நகரின் சில பகுதிகளுக்கு குறிப்பாக தொலைவில் மேடான பகுதிகளுக்கு குடிநீா் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

எனவே இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் 24 மணிநேரத்துக்குள் அகற்றி சரிசெய்து கொள்ள வேண்டும். ஒருவேளை ஆய்வுக்குழு மூலம் மோட்டாா் பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்படும். மேலும், குடிநீா் இணைப்பில் மோட்டாா் பொருத்தி இருந்தாலோ, சுட்டிக் காட்டியுள்ள குறைகளை சரிசெய்ய தவறினாலோ அல்லது ஆய்வு அலுவலா்களை அனுமதிக்க மறுத்தாலோ, தடுத்தாலோ குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →