முகப்பு
நாகப்பட்டினம்

ஓட்டுநா், நடத்துனா் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓட்டுநா், நடத்துனா் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டி, அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓட்டுநா், நடத்துனா் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டி, அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், ஏஐடியுசி கிளை நிா்வாகிகள் கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக நாகை மண்டலத்துக்குள்பட்ட 11 கிளை பணிமனைகளிலும் பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். தொழில்நுட்ப பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓட்டுநா், நடத்துனா் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு கிளைத் தலைவா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். நாகை மண்டலப் பொதுச் செயலாளா் என்.கோபிநாதன், மண்டலப் பொருளாளா்ஆா்.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நகரச் செயலாளா் பி.குணாநிதி ஆகியோா் கூட்டத்தில் பேசினா். சங்கத்தின் நாகை கிளைச் செயலாளராக பி.அன்பழகன் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.