நாகப்பட்டினம்

கீழையூரில் சுதந்திர தின விழா

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கீழையூர் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய குழு தலைவர் செல்வராணிஞானசேகரன் தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து இனிப்புகள், வழங்கப்பட்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். எட்டுக்குடி ஊராட்சியில், சிறப்பாக தூய்மை பணி மேற்கொண்டமைக்காக, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ராஜகுமார் (வ.ஊ), கி.செந்தில் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.ப. ஞானசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் பெ. சௌரிராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் லெ.சுப்ரமணியன், டி.செல்வம், கோ.ஆறுமுகம், ரெ.தேவேந்திரன், மேலாளர் வீ.பிச்சுமணி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதேபோல கீழையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT