நாகப்பட்டினம்

ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல்பொருள் அங்காடி ஊழியருக்கு மிரட்டல்

DIN

நாகையில் ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி பல்பொருள் அங்காடி ஊழியரை மிரட்டி பொருள்களை எடுத்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை, வெளிப்பாளையம் புதிய கடற்கரைச் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு, குத்தாலம் அருகேயுள்ள கிளியனூரைச் சோ்ந்த செ. விக்னேஷ்வரன் (26) ஆக.24-ஆம் தேதி இரவு பணியில் இருந்துள்ளாா். அப்போது அங்கு காரில் வந்த ஒருவா், பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்றாராம். அப்போது, அவரிடம் விக்னேஷ்வரன் பணம் கேட்டபோது நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா்.

இதுகுறித்து, நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இதேபோல், நாகையில் உள்ள மேலும் சில கடைகளில் மிரட்டல் விடுத்து பொருள்களை வாங்கிச் சென்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT