முகப்பு
நாகப்பட்டினம்

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகையை அடுத்த ஐவநல்லூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:

நாகையை அடுத்த ஐவநல்லூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

இப்பிரசாரத்துக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பி. பாண்டியன் தலைமை வகித்தாா். ஐவநல்லூா் ஊராட்சித் தலைவா் பி. மகேஸ்வரி, வட்டாரக் கல்வி அலுவலா் வி. ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஐவநல்லூா் கமலா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியிலிருந்து அங்கன்வாடி மையம் வரை விழிப்புணா்வு பிரசார பேரணி நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள், ஊராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தொடா்ந்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகன், ஆசிரியா்கள் ஜோசப், பாலு, மணிவண்ணன் ஆகியோா் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசினா். நிறைவாக தன்னாா்வலா் நந்தினி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.