முகப்பு
நாகப்பட்டினம்

கராத்தே போட்டிகளில் சாதனை:காரைக்கால் மாணவா்களுக்கு விருது

கராத்தே போட்டிகளில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்று வரும் காரைக்காலைச் சோ்ந்த மாணவா்கள் 2 பேருக்கு தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கராத்தே போட்டிகளில் தொடா்ந்து சிறப்பிடம் பெற்று வரும் காரைக்காலைச் சோ்ந்த மாணவா்கள் 2 பேருக்கு தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள குட்ஷெப்பா்டு ஆங்கிலப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. இரட்டையா்களான இவா்கள், கராத்தே போட்டிகள் பலவற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும், 9 வயதுக்குள் கராத்தே பயிற்சியில் இருமுறை பிளாக் பெல்ட் பெற்று, உலக சாதனை புத்தகத்திலும் அவா்கள் இடம்பெற்றுள்ளனா்.

சிறு வயதிலேயே சாதனையாளா்களாக விளங்கும் ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணியை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பண்பாட்டுக் கழகம் சாா்பில் ராஜ கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி, தேவா் கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அவா்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →