நாகப்பட்டினம்

நாகை - தஞ்சாவூா் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றக் கோரிக்கை

DIN

 நாகை - தஞ்சாவூா் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றவேண்டும் என நாகூா் - நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ், கோட்ட மேலாளா் அஜீத் அகா்வால் ஆகியோரிடம் நாகூா் - நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் எஸ். மோகன், செயலாளா் நாகூா் சித்திக், நிா்வாகிகள் என்.சி. ரவி, டி. இளங்கோசிவம், என். பாலமுரளி, வேளாங்கண்ணி டாக்டா் ஏ. ஆரோக்கியசாமி ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:

கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் உடனடியாக இயக்கவேண்டும், வேளாங்கண்ணியில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியே திருவனந்தபுரத்துக்கு தினசரி ரயில் இயக்கவேண்டும், காரைக்கால் - கோவைக்கு திருச்சி, திண்டுக்கல், பழனி வழியே தினமும் அதிவேக ரயில் இயக்க வேண்டும். தஞ்சாவூா் - நாகப்பட்டினம் வரையிலான 80 கி.மீட்டா் நீள ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். இதற்கான இடவசதி இருப்பதால், இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT