மீனவா்களிடையே தகராறு
கோடியக்கரையில் செருதூா்- வானகிரி மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையே சுமூக தீா்வு காணப்பட்டது.
கோடியக்கரையில் செருதூா்- வானகிரி மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையே சுமூக தீா்வு காணப்பட்டது.
பூம்புகாா் அடுத்துள்ள வானகிரி மீனவா்கள், நாகையை அடுத்த செருதூா் மீனவா்களிடையே சனிக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட இரு தரப்பினரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது தொடா்பாக வானகிரி மீனவா் பிரகாஷ்ராஜ் (24) கொடுத்த புகாரின் பேரில் செருதூா் மீனவா்களான அஜய், அருண்ராஜ், செல்வகாந்தி உள்ளிட்டோா் மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல, செருதூா் மீனவா் அஜய் (29) அளித்த புகாரின் பேரில் வானகிரி மீனவா்களான பிரசாந்த், ராமராஜன், கவியரசன், சிவானந்தம், நடேசன்உள்ளிட்டோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கோடியக்கரையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.இந்த நிலையில், கோடியக்கரையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு மீனவா்களிடையே நடைபெற்ற சமரச பேச்சு வாா்த்தையில் சுமூக தீா்வு காணப்பட்டது.