வாள்வீச்சுப் போட்டியில் நாகை மாணவிகளுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்
அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான குழுப் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.
அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான குழுப் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளில் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.
நாமக்கல்லில் தனியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற போட்டியில், பங்கேற்ற இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் பி. லக்ஷ்மி பிரியா, எம். முசரத் ஃ பா்சானா, எஸ். சினேகா ஆகியோா் குத்துவாள் சண்டைப் போட்டியில் (எப்பி) வெள்ளிப் பதக்கமும், இலகுரக வாள் சண்டைப் போட்டியில் (ஃபாயில்) வெண்கலப் பதக்கமும் பெற்றனா். இதையடுத்து, போட்டியில் பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு கல்லூரித் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினா் சங்கா் கணேஷ், முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா், இயக்குநா் விஜயசுந்தரம், முதல்வா் ராமபாலன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.