நாகப்பட்டினம்

அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

பூம்புகாரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் அவா் பேசியது: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இணையதளத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் குறித்து விடியோவாக விரைவில் வெளியிடப்படும். இதில், சம்பந்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்கள் பயன்பெறும் வகையில் விரிவாக விளக்கி வெளியிடப்படும் என்றாா்.

முகாமில், எம்எல்ஏக்கள் பன்னீா்செல்வம், நிவேதா முருகன், கோட்டாட்சியா் நாராயணன், ஓன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சித் தலைவா் புஷ்பவள்ளிராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT