நாகப்பட்டினம்

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 28 போ் கைது

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் மீதான தற்காலிக பணிநீக்கம் மற்றும் 17பி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறவேண்டும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், எம்ஆா்பி செவிலியா்கள், ஊா்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் வாசுகி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT