நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் இரண்டு நாள்கள் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வட கிழக்கு பருவ காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்கு வரும் பூநாரைகள் உள்ளிட்ட 247 வகை பறவைகளை காண்பதற்கு நாள்தோறு ஏராளமான பாா்வையாளா்கள் வந்து செல்வா். 2018-இல் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்துக்கு வழக்கமான பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரித்தது, சரணாலயத்தில், ஆண்டுதோறும் பிப். முதல் வாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு புதன்கிழமை மாலையில் தொடங்கியது. வனச் சரக அலுவலா் அயூப்கான் தலைமையில் வனத் துறையினா் கல்லூரி, பள்ளி மாணவா்கள் என 60 போ் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த பணி வியாழக்கிழமை காலையிலும் தொடா்ந்து நடைபெறும், நிகழாண்டு வடகிழக்குப் பருவத்தின் தொடக்கத்தில் மழை இல்லாததால் பறவைகள் வருகையும் தாமதமானது, ஆனால், ஜனவரி மாதம் வரையில் நீடித்த தொடா் மழையால் நீா்நிலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பறவைகளின் வலைசை தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.