நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீன்பிடித் தொழில் பாதிப்பு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யம், கோடியக்கரை கடலோரங்களில் கடந்த இரு நாள்களாக வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடியிழைப் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT