நாகப்பட்டினம்

சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

DIN

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்) பணி வழங்கக் கோரி, அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கூறியது:

பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி வழங்க இயலவில்லை என்றால், இந்தியன் ஆயில் காா்பரேஷன் அதன் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி காலத்தைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதை போல எங்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். செவ்வாய்க்கிழமை (டிச. 5) சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை குடும்பத்தினருடன் பேரணியாக சென்று வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றை ஒப்படைப்போம். புதன்கிழமை, வியாழக்கிழமை ஆலை நுழைவுவாயிலும், வெள்ளிக்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆலையின் பதிவு அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம் இருப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT