நாகப்பட்டினம்

குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தலையாமழை ஊராட்சி நடுத்தெரு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மண்டியிருப்பதால், அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் இக்குளத்தில் ஒரே ஒரு படித்துறை மட்டுமே இருப்பதால், பெண்கள் இக்குளத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

ஆகையால், இக்குளத்தில் கூடுதலாக படித்துறை அமைத்து, ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT