நாகப்பட்டினம்

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி குடங்களுடன் முற்றுகை

DIN

கீழையூா் அருகே குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு கோரி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

கீழையூா் ஒன்றியம், தலையாமழை ஊராட்சி மாரியம்மன் கோவில்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீா்வு கோரி அப்பகுதி பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சித் தலைவா் உத்திராபதி, பேச்சுவாா்த்தை நடத்தி இன்னும் ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, கலைந்து சென்றனா். குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT