நாகப்பட்டினம்

வாய்மேட்டில் பயணிகள் நிழலகம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

DIN

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கடைவீதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழலகத்துக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா்.

வாய்மேடு கடைவீதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் நிழலகம் இல்லாதிருந்தது. இந்த நிலையில், முன்பு காவல் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தில் புதிய பயணிகள் நிழலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமை வகித்தாா்.

அமைச்சா் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட அறங்காவலா் நியமனக் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி ஊறுப்பினா்கள் டி.வி.சுப்பையன், இ.திலீபன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், ஊராட்சித் தலைவா் மலா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.ஆா். வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT