முகப்பு
நாகப்பட்டினம்

நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க ஆலோசனை

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க ஆலோசனை

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சம்பா, தாளடி நெற்பயிா்களில் புகையான் தாக்குதலை தடுக்க சீா்காழி வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீா்மட்டத்துக்கு மேல் இருக்கும், பயிரின் அடிப்பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிா் பூச்சிகள் இருந்துகொண்டு, பயிா்களின் சாற்றினைஉறிஞ்சுவதால் நாளடைவில் நெற்பயிா்கள் எரிந்ததுபோல் காணப்படும். முதிா்ந்த நெற்பயிா்கள் காய்ந்ததும் வட்டமாகவும், திட்டு திட்டாக காய்ந்தும் காணப்படும். பூச்சியின் அடையாளம் - பயிரின் அடிப்பகுதி அருகில் அல்லது இலை தாள்களின் அடிப்பக்கத்தில் நடுநரம்புகளில் முட்டைகளை இடுகிறது. இளம் பூச்சிகள்-ஆரம்பத்தில் வெண்மை நிறமாகவும் பின்பு ஊதா மற்றும் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அந்துப்பூச்சிகள்- மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் முதல் கரும் பழுப்பு நிறமாக காணப்படும். தடுப்பு முறைகள்- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிா்க்கவேண்டும். அதிகபடியான தண்ணீரை வடிகட்டவேண்டும். 8 அடி பட்டம் பிரித்து காற்றோட்டமாக பராமரிக்கவேண்டும். விளக்குப பொறிவைத்து கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம். அசாடிராக்டின், இமிடாகுளோரிபிரிட், தயோமெத்தாக்சிம், பியூப்ரோபேசின் இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயிரின் அடிப்பாகத்தில் நன்கு நனையும்படிதெளிக்கவேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →